தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் தனது மகள் திருமணத்துக்கு விவேக் செய்த உதவி குறித்து, கண்ணீர் மல்க குமரிமுத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் குமரிமுத்துவின் பேட்டி தான். 2016-ம் ஆண்டு குமரிமுத்து காலமாகிவிட்டாலும், அவருடைய பழைய பேட்டியில் தனது மகள் திருமணத்தின் போது விவேக் செய்த உதவி குறித்து கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.