ராஞ்சி: கால்நடை தீவன வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவிற்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஜாமின் வழங்கியுள்ளது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஆண்டு கணக்கில் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது, உடல்நலக் குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மொத்தமுள்ள நான்கு ஊழல் வழக்குகளில், மூன்றில் லாலுவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.

இந்நிலையில், நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கில் லாலு பிரசாத்திற்கு ராஞ்சி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இதனால், அவர் சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.