2017-ல் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் வெளியான படம் விக்ரம் வேதா. விஜய் சேதுபதி, மாதவன் இருவரது நடிப்பும் மிகப்பெரிய வெற்றியை தந்தது.
அப்போதே இந்தியில் இதனை அமீர்கான் வைத்து ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்தனர். அவரும் ஒப்புக்கொண்டார்.
சீன ரசிகர்களை கவர, வடசென்னையில் எடுக்கப்பட்ட விக்ரம் வேதாவின் கதையை ஹாங்காங்குக்கு மாற்றச் சொன்னார்.
அந்த நேரம் தான் வூகானில் கொரோனா தொற்று பரவி, நாடுகளுக்கிடையிலான எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. ஹாங்காங் திட்டம் நிறைவேறவில்லை. ஹாங்காங் இல்லையென்றால் விக்ரம் வேதாவும் வேண்டாம் என்று படத்திலிருந்து விலகினார் அமீர்கான்.
இப்போது மாதவன் நடித்த விக்ரம் வேடத்தில் சயிப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த வேதா வேடத்தில் ரித்திக் ரோஷனும் நடிக்க உள்ளனர். இயக்கம் அதே புஷ்கர் – காயத்ரி.