டில்லி
இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,157 கர்நாடகாவில் 11,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 11,265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 10,94,912 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 38 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 13,046 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 8,155 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 9,96,367 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 85,480 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 9,37,049 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை 7,339 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 1,606 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 9,01,327 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 28,383 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.