பிரேசில்:
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,616 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 71,832 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 13,445,006 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தொற்று பாதித்த 2,616 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு மொத்த உயிரிழப்பு 351,334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.  பிரேசிலில் கடந்த ஜனவரி 17 முதல் தற்போது வரை 2.95 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]