ஜகார்த்தா: இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சம்பர்புகுங் நகரிலிருந்து தெற்கே 44.8 கிமீ  மையத்தில் 82 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

இது குறித்து இந்தோனேசியாவின் பூகம்பம் மற்றும் சுனாமி மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் இல்லை.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாறைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாகாணத்தின் சில பகுதிகளில் மக்கள் மிதமான நிலநடுக்கத்தை உணர்ந்ததாகச் சொல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்டை நகரமான மலாங்கின் பிளிட்டரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மேற்கூரை சேதடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.