காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா.
லாக்டவுன்னுக்கு பின்னர் டிரிப் என்ற திரைப்படத்தில் நடித்த அவர், இப்போது ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சுனைனாவுக்கு திருமணம் என்று வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அவர், ”கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குநர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், தனது திருமணம் பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு, தனது திரைப்படங்கள் குறித்து பேச வேண்டும். இப்போதைக்கு தான் திரை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.