திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் நாள்தோறும் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் கேரள சட்டசபை தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]