சென்னை

மிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தராக கே என் செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை வேப்பேரியில் தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.  இதே வளாகத்தில் தமிழக கால்நடை மருத்துவக் கல்லூரியும் அமைந்துள்ளது.

இந்த பல்கலைக்கழக துணைவேந்தராகப் பேராசிரியர் கே என் செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த உத்தரவைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித வெளியிட்டுள்ளார்.

கே என் செல்வகுமார் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டுகளாக மூத்த பேராசிரியராகப் பணி புரிந்துள்ளார்.  இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் துணைவேந்தராக செயல்பட உள்ளார்.

[youtube-feed feed=1]