சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  காலை 11 மணி வரை நிலரப்படி, 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத்துக்கு இன்று  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 234 சட்டமன்ற தொகுதிகள் உள்பட குமரி நாடாளுமன்றத்  தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக அ னைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இன்று   காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நேர நிலவரப்படி  13.80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி  26.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
[youtube-feed feed=1]