கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வந்து சென்றார். அப்போது, கோவையில் நடத்தப்பட்ட ரகளைகள் ஒருபக்கம் என்றால், சமூக வலைதளங்களில், அவர் குறித்து கிளம்பிய கிண்டல்களை நாம் கவனிக்க வ‍ேண்டும்.

பொதுவாக, யோகி ஆதித்யநாத் போன்றவர்களை, நாட்டின் மோசமான முதலமைச்சர், ஜனநாயகத்தின் களங்கம், காவி தீவிரவாதி என்றெல்லாம் விமர்சனம் செய்வார்கள் அரசியல் வட்டாரத்தில்!

ஆனால், தமிழ்நாட்டில், சமூக வலைதளங்களில், யோகியின் வருகை குறித்து இந்தமுறை எழுந்த விமர்சனங்களும் கிண்டல்களும் வேறுவகையாக உள்ளன.

அவற்றுள் சில மட்டும் இங்கே:

1. யோகி: அது என்ன சாலைக்கு மேலே பெரிதாக ஏதோ இருக்கிறது?

மற்றொருவர்: அதற்கு பெயர்தாங்க பாலம்(flyover). தமிழ்நாட்டில் இதுபோன்று எக்கச்சக்கமாக பார்க்கலாம்.

2. மற்றொருவர்: உங்கள் மாநிலத்துல எத்தனை அரசு மருத்துவமனைகள் இருக்கு?

யோகி: ச்சீ…சீ… அதையெல்லாம் போய் யாரு கட்டுவா? அதெல்லாம் எதுக்கு?

3. மோடி: கோயம்புத்தூர் போனியே யோகி, எப்படி இருந்துச்சி?

யோகி: அட போங்க ஜி, விமான நிலையத்துல இருந்து, பிரச்சார மேடைக்கு போற வரைக்கு, வழிபூரா ஒரே காலேஜ், ஹாஸ்பிடல், சூப்பரான ரோடு, நிறைய ஸ்கூல், பக்காவான பில்டிங்ஸ், இன்னும் நிறைய நிறைய… இந்த மாதிரி மாநிலத்துல நாம எப்புடி ஜி பொழைக்கிறது?

இப்படியான பலவித கிண்டல்கள், பாஜகவின் வளர்ச்சிக்கு எதிரான பிற்போக்கு அரசியலையும், திராவிடத்தின் முற்போக்கு மற்றும் வளர்ச்சி அரசியலையும் ஒப்பிட்டு, தினுசுதினுசாக சமூகவலைதளங்களில் காணக்கிடைத்தன.

இத்தகைய கிண்டல் – கேலிகளை, சமூக வலைதளங்களில் பார்க்கும் வலதுசாரி ஆதரவாளர்களுக்கு, பதிலடி கொடுப்பதற்கு நிச்சயம் எதுவுமில்லைதான்!