சாகர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 118 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
அம்மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் சதர்பூர் கிராமத்தில் வசிக்கும் 118 வயது பெண் துல்சபாய். அவர் இன்று தமது முதல் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டில் மிகவும் வயதான ஒருவர் முதல்முறையாக தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக மாவட்ட நீதிபதி தீபக் சிங் கூறி உள்ளார். .
இதுகுறித்து மூதாட்டி துல்சபாய் கூறி இருப்பதாவது: நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். என்னைப் போன்று அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட வில்லை என்று கூறி உள்ளார். மூதாட்டி துல்சபாய் 1903ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.