சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் சில இடங்களில் தட்டுப்பாடு என்று கூறுவது வதந்தி என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ஜெ.ராதாகிருஷ்ணன்  கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதே வேளையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு  வருகிறது.  இந்த நிலையில், சில பகுதிகளில் தடுப்பூசி இல்லை என கூறி,  தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நபர்கள்  திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளன.

இதுகுறித்துசுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அப்போது, மத்தியஅரசிடம் இருந்து, தமிழகத்துக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை 34 லட்சத்து 5 ஆயிரத்து 800 கோவிஷீல்டு, 5 லட்சத்து 67 ஆயிரத்து 520 கோவேக்சின் என மொத்தம் 39 லட்சத்து 73 ஆயிரத்து 320 தடுப்பூசிகள் வந்துள்ளன.

இதுவரைதமிழகத்தில்  மொத்தம் 31 லட்சத்து 14 ஆயிரத்து 623 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 8 லட்சத்து 58 ஆயிரத்து 697 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

3ந்தேதி (இன்று) மேலும், 12 லட்சத்து 90 ஆயிரத்து 790 கோவிஷீல்டு, 4-ம் தேதி 2 லட்சத்து 14 ஆயிரத்து 610 கோவேக்சின் என 15 லட்சத்து 5 ஆயிரத்து 400 தடுப்பூசிகள் வர இருக்கிறது. இந்த தடுப்பூசி மருந்துகளை  குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டிது இருக்கிறார். இதனால், சில இடங்களுக்கு எடுத்துச்செல்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம், மற்றபடி   தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏதும் கிடையாது என்று கூறினார்.