டெல்லி: கொரோனா பாதித்ததால், செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11ம் தேதிக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளில் செய்முறைத் தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்பட்டது. அதில், கடந்த மார்ச்சில் செய்முறைத் தேர்வின் போது தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கோ கொரோனா பாதித்து, தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு சிபிஎஸ்இ ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.
தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு மட்டும் ஜூன் 11ம் தேதிக்குள் பள்ளிகள் செய்முறை மறுதேர்வு நடத்தலாம் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.