சேலம்: சேலம் மாநகர் காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் காங்கிரஸ் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இதற்கிடையில் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம் போன்றவைகளால் தொற்று பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வேட்பாளர்கள் உள்பட பலர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இசேலத்தில் நேற்று ஒரே நாளில் 51 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்த நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் கடந்த 4 நாட்களாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]