சென்னை: தமிழகத்தில் இதுவரை 1.31 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டு உள்ளதாகவும், அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் மே 2ந்தேதி காலை 8 மணி வரை பெறப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்தியபிரதா சாகு, ஜி-பே மூலம் பணபட்டுவாடா செய்யப்படுகிறது என்பது தொடர்பான தெளிவான புகாரை யாரும் இதுவரை அளிக்கவில்லை என தெரிவித்தவர், எத்தனை பேருக்கு எவ்வளவு தொகையை அனுப்பப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிட்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
80 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் வாக்கு பெறும் கால அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், 80 வயதுக்கு மேற்பட்ட 4.66 லட்சம் முதியவர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்ய தகுதியானர்வர்கள். ஆனால், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 12 டி விண்ணப்பங்கள் 92,559 தரப்பட்டுள்ளன. அவர்கள் வாக்களிக்க மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்த மொத்தம் 3,46,519 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு அதில், இதுவரை 1,32,350 தபால் வாக்குகள் பெறப்பட்டு இருப்பதாக கூறினார்.
காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 அதாவது, தேர்தல் முடிவு வெளியிடப்படும் அந்த நாளில் காலை 8 மணி வரை பெறப்படும் . இதுவரை 1.31 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
புதிய வாக்காளர்களுக்கு விரைவு தபால் மூலம் வாக்காளர் அட்டை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.