மும்பை: உலகத் தரவரிசையில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, முதன்முறையாக ‘நம்பர் – 4’ என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பினால் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதற்குமுன்னர், இந்திய ஆண்கள ஹாக்கி அணிக்கு அதிகபட்சமாக கிடைத்திருந்த கவுரவம் 5வது இடம்தான். மேலும், ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜெண்டினா அணி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஹாக்கி புரோ லீக் தொடரில். முதல் 3 சுற்றுகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதே இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
முதலிடத்தை உலக சாம்பியன் பெல்ஜியம் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அடுத்த 2 இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் ஹாலந்து அணிகள் உள்ளன.
இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளது.