சென்னை

நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் மாதத்துக்கான முக்கிய அறிவிப்புக்களை இன்று தமிழக அரசு வெளியிட உள்ளது

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் கொரோனா கட்டுப்பாட்டுக்காக நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   அது கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்படுகிறது.    சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தாக்கம் சற்றே குறைந்தபடியால் அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை மாதா மாதம் அறிவித்தது.

ஆனால் இம்மாத தொடக்கம் முதல் தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலேயே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  இது கொரோனா பரவலின் இரண்டாம் அலையாக இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.   இதையொட்டி மக்களிடையே மீண்டும் முழு ஊரடங்கு அமலாகலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

அதே வேளையில் தமிழக சட்டப்பேரவை காரணமாக ஏப்ரல் 6 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படாது எனக் கூறப்பட்டது.  இந்நிலையில் தேர்தலுக்குப் பிறகு இரவு நேர முழு ஊரடங்கு அமலாகும் என ஊகங்கள் எழுந்துள்ளன.   இன்று தமிழக அரசு ஏப்ரல் மாதத்துக்கான அறிவிப்புக்களை வெளியிட உள்ளதால் இது குறித்து அப்போது தெரிய வரும் எனச் சொல்லப்படுகிறது.