கடந்த 2010-ம் ஆண்டு அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடிப்பில் வெளியான வேதம் திரைப்படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் நாகையா காலமானார்.

அவருக்கு வயது 77. தமிழில் சிலம்பரசன் நடித்து வானம் என்ற பெயரில் வெளியானது.

வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு செய்தியை அறிந்த தெலுங்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நல்ல இதயம் கொண்ட மனிதர் ஒருவர் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். நாகையாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என வேதம் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை அனுஷ்கா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/AnushkaShetty/posts/295223371963447