கிராமத்து கதைகளை மண்வாசனையோடு சொல்லும் டைரக்டர்களில் முத்தையாவும் ஒருவர்.

ஏற்கனவே முத்தையா, கார்த்தியை வைத்து கொம்பன் என்ற படத்தை டைரக்டு செய்தார்.

நல்ல விமர்சனம் கிடைத்தது.

கொம்பன் கூட்டணி மீண்டும் இணைகிறது.

கார்த்தி நடிக்க இன்னொரு கிராமத்து கதையை உருவாக்கி வைத்துள்ளார், முத்தையா. இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறார்.

கார்த்தி, இப்போது மணிரத்னம் டைரக்‌ஷனில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

அதன் ஷுட்டிங் மே மாதம் வாக்கில் முடியும் என தெரிகிறது. எனவே மே மாதம் கடைசியில் கார்த்தி – முத்தையா படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

– பா. பாரதி