டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,87,013 ஆக உயர்ந்து 1,60,726 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,419 பேர் அதிகரித்து மொத்தம் 1,17,87,013 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 249 அதிகரித்து மொத்தம் 1,60,726 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 26,575 பேர் குணமாகி இதுவரை 1,12,29,591 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,91,956 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 31,855 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,64,881 ஆகி உள்ளது நேற்று 95 பேர் உயிர் இழந்து மொத்தம் 53,694 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 15,098 பேர் குணமடைந்து மொத்தம் 22,62,593 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,47,299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 2,456 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,09,909 ஆகி உள்ளது. இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,528 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,060 பேர் குணமடைந்து மொத்தம் 10,80,803 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,265 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,258 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,75,955 ஆகி உள்ளது இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,461 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 995 பேர் குணமடைந்து மொத்தம் 9,46,589 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 585 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,95,121 ஆகி உள்ளது. நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,197 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 251 பேர் குணமடைந்து மொத்தம் 8,84,978 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,946 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,636 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,71,440 ஆகி உள்ளது இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,630 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,073 பேர் குணமடைந்து மொத்தம் 8,49,064 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,746 பேர் சிகிச்சையில் உள்ளனர்.