சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மே 31-வரை பள்ளிகள் மூடபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உயர்நிலை, மேல்நிலை மாணாக்கர்களுக்கு ஆன்லைனில் படிப்பு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப்போல புதுச்சேரி யூனியனிலும் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு சமீப நாட்கள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பள்ளிகளை மூட பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுதொடர்பாக மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை தலைமையிலான மாநில கொரோனா தடுப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதுச்சேரியில் மே 31-வரை ஸ்டேட் போர்டு , சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ என அனைத்து விதமான பள்ளிகளும் மூடப்படுகிறது
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாது .
ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும், இந்த வகுப்புகள் வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளை புதுச்சேரி மாநில உயர்கல்வித்துறை இயக்குநர் ருத்ரா கவுட் தெரிவித்துள்ளார்.