கொரோனாவுக்கு பிறகு, தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள், பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது..

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 50 படங்கள் இந்த காலகட்டத்தில் ரிலீஸ் ஆனாலும், “மாஸ்டர்” படத்தை தவிர எந்த படமும் லாபம் சம்பாதித்து கொடுக்க வில்லை.

பெரிய நடிகர்கள் படத்தை பார்க்க மட்டுமே, இனி தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவார்கள் என்பது ஊர்ஜிதமாகி விட்டது.

ரஜினி, விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் இப்போது வருவதற்கு வாய்ப்பு இல்லை.

எனவே, பழைய படங்களை திரையிட தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.

அடுத்தடுத்த நாட்களில் எம்.ஜி.ஆர்.நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ரஜினிகாந்த் நடித்த ஒரே ஆங்கிலப்படமான ‘பிளட்ஸ்டோன்’ அஜித்தின் ‘மங்காத்தா’, மாதவன் நடித்த ‘மின்னலே’ ஆகிய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளன.

தியேட்டர்கள் நிரம்பும் என தியேட்டர் முதலாளிகள் நம்பிக்கையோடு உள்ளனர்.

– பா. பாரதி