சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்க காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மதுவிலக்கு, ஆணவப்படுகொலை தடுப்பு, நீட் ரத்து, வேளாண் பாதுகாப்பு மசோதா உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அறிவிக்கப்படாத நிலையில், தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்த தேர்தல் அறிக்கையில் 26 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு…
திமுக ஆட்சி அமைந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க வலியுறுத்தப்படும்.
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழகத்தில் ஆணவப்படுகொலைகளை தடுக்க, தனிச் சிறப்பு சட்டங்கள் இயற்றப்படும்,
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை 10சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
புதிய தொழில்முனைவோருக்கு 5 ஆண்டுகள் வரை வரி விலக்கு வழங்க நடவடிக்கை,
ஆண்டு தோறும் 500 இளைஞர்களை தேர்வு செய்து ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி,
சிறுகுறு தொழில்முனைவோருக்கு வங்கிக்கடனில் 50 சதவீதம் மானியமாக வழங்க நடவடிக்கை,
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்
உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் செய்யப்படும்., நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை.
வேளாண் பாதுகாப்பிற்காக புதிய மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற நடவடிக்கை.
டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை.
அதிமுகவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்தக்காரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களைத் தொகுப்பதற்கு வழிவகுத்த விதிகள் மாற்றியமைக்கப்படும்.
புதிதாக தொழில் முதலீடு செய்கிற முனைவோருக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நுண் தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 சதவிகிதத்தைத் தமிழக அரசு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
https://www.patrikai.com/wp-content/uploads/2021/03/Congress-Manifesto.pdf