
பாரி கே.விஜய் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.
இதில் பார்வதி நாயர், முனீஷ்காந்த், திண்டுக்கல் ஐ.லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி, ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக கோபி ஆனந்த் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரியவுள்ளனர்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும், கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது ‘ஆலம்பனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் ‘ஆலம்பனா’ படத்தில் பூதமாக முனீஸ்காந்த் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
[youtube-feed feed=1]A pinch of drama + a scoop of romance + a cup of laughter + a generous dose of magic… Get ready for #Aalambana 💫🤩 Here's #AalambanaFL 🧞♂️@dir_parikvijay @actor_vaibhav @paro_nair @hiphoptamizha @koustubhent @Kabirduhansingh @sonymusicsouth @proyuvraaj @gobeatroute pic.twitter.com/7UdKF5ifqm
— KJR Studios (@kjr_studios) March 12, 2021