2021 மார்ச் 11, வியாழனன்று இரவு 11:30 மணியிலிருந்து மஹாசிவாரத்திரி கொண்டாட்டம் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது .

கோவை ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் விமரிசையாக மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு, சத்குரு முன்னிலையில் இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.

 

மனதிற்கு பரவசமூட்டும் இசை நிகழ்ச்சிகள்: மஹாசிவராத்திரி கொண்டாட்டம், கலை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் சிறப்பான சங்கமமாக நடைபெற உள்ளது. இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் சிவபெருமானின் புகழைப்பாடுவதற்காக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரைவி மகா ஆரத்தி, சத்குரு ஜக்கி வாசுதேவின் சொற்பொழிவு ஷம்போ தியானம், பிரம்மா முகூர்த்த மந்திரம் என பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்றன.

நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கௌதம் கிச்லு உடன் கலந்து கொண்டார். மேலும் நடிகை சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், லட்சுமி மஞ்சு சமந்தாவின் தோழி ஷில்பா ரெட்டி உள்ளிட்டோரும் சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

[youtube-feed feed=1]