சென்னை:  தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.  தேர்தல் காரணமாக, பொதுமக்களின் கூட்டம் கூடுவதாலும், பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டுவதாலும், தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று தமிழகத்தில் 10நதேதி மாலை நிலவரப்படி, புதிதாக மேலும  671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனதால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை,  8,56,917  ஆக அதிகரித்துள்ளது.  அதிக பட்சமாக சென்னையில் நேற்று  275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,37,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 12,530 பேர் உயிர் இழந்துள்ளனர். அதேவேளையில்,   8,40,180 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போதைய நிலையில் 4,207 பேர் சிகிச்சையில் உள்ளனன சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் தொற்று பரவல் 50 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.  அதாவது 51.81 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும், முக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கூட்ட நெரிசல்களை தவிர்த்தல் போன்றவைற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல மாவட்டங்களில், முக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.