சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், வரும் 23- ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்து உள்ளது.

தமிழக சட்டமன்றத்தன் ஆயுட்காலம் மே மாதம் 24ந்தேதியுடன் முடிவடைகிறது. முன்னதாக தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி பதவி ஏற்க வேண்டும். இதன் காரணமாக தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநில அரசின் நிதி தேவைகளைக் கருத்தில் கொண்டு, தமிழகஅரசு வரும் 23ந்தேதி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது.    தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து  தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 23-2-21ந் தேதி அன்று முற்பகல் 11 மணிக்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை பேரவைக்கு  அளிக்கப்பெறும் என்று தெரிவித்து உள்ளார்.