சென்னை: நாடு முழுவதும் எரிப்பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது மோடி தலைமையிலான மத்தியஅரசு. இந்த மாதத்தில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 2 முறை உயர்த்தி, தற்போது  ரூ.785க்கு விற்பனை செய்யப்படுகிறது.  மோடி அரசின் நடவடிக்கைக்கு இல்லத்தரசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரலாறு காணத அளவில் உயர்ந்து வருகிறது.  இந்த நிலையில்,  சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்துங்ளளது. கடந்த மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக உயர்ந்துள்ள சமையல் எரிவாயுவின் விலை, இந்தமாதத்தில் மட்டும் 2வது முறையாக மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், தற்போது சென்னையில் சமையல் எரிவாயுவின் விலை ரூ. 785 ஆக அதிகரித்து உள்ளது.  இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது காரணம் என்று கூறப்படுகிறது. கச்சா எல்லை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக எண்ணை நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்த சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையே இன்னும் முற்றிலுமாக திரும்பாத நிலையில், சமையல் எரிவாயு உள்பட பெட்ரோலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த கொரோனா பரவலின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோது, சமைல் எரிவாயு விலை சிறிதளவே குறைக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில்  14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு (2020)ஆனால், டிசம்பர் மாதத்தில் 1ந்தேதி அன்று ரூ.50 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, டிசம்பர் 15ம் தேதியும் தலா  ரூ. 50 வீதம் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் இரு முறை உயர்த்தப்பட்டது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, 2020 ஜனவரி மாதம் விலையில் எந்தவித மாற்றமில்லாமல் தொடர்ந்த நிலையில், பிப்ரவரி 4ந்தேதி கேஸ் சிலிண்டர் விலை மீண்டும்  உயர்த்தப்பட்டது.  அதன்படி நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது.  இந்த நிலையில், இன்று முதல் (பிப்ரவரி 15ந்தேதி) மேலும ரூ.50 உயர்த்தப்ட்டு உள்ளது. அன்படி புரிய விலை ரூ.785 ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் ஒரு கேஸ் சிலிண்டர் (14.2 கிலோ) விலை 769 ரூபாயாகவும், சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டர் 785 ரூபயாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இன்னும் முழுமையாக வாழ்வாதாரமே திரும்பாத நிலையில், மோடி அரசு, சாமானிய மக்களின் விலைவாசியை உயர்த்தி சாமானிய மக்களின் வயிலடிக்கிறது என்று கொந்தளித்துள்ளனர்.

டீசல், சமையல் எரிவாயும் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், எண்ணை பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று தமிழகத்தின் திமுக, காங்கிரஸ், பாமக,  கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

சமையல் எரிவாயு மீது மாநிலங்கள் விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் கேஸ் விலையில் மாற்றம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. <