சென்னை: தமிழகஅரசு 16.43 லட்சம் விவசாயிகளின் பயிர்க் கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதராக அறிவித்துள்ள நிலையில், அந்த பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்குவதை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், தமிழகஅரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் கடன் தொகையான ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்படுவதாக கடந்த 5ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
முதல்வரின் அதிரடி அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணையை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்த ரசீது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக, மாவட்ட வாரியாக விவசாயிகள் எண்ணிக்கை, கடன் தொகை நிலுவை உள்ளிட்ட விவரங்களை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க கூட்டுறவுத் துறை பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. விவசாயிகளின் விவரங்களை பெற்று, சரிபார்த்தல், கள ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
பயிர்கடன் தள்ளுபடி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்: