டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,71,060 ஆக உயர்ந்து 1,55,399 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 12,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,08,71,060 ஆகி உள்ளது. நேற்று 110 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,55,399 ஆகி உள்ளது. நேற்று 11,796 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,05,71,629 ஆகி உள்ளது. தற்போது 1,39,441 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,451 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,53,253 ஆகி உள்ளது நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,390 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,421 பேர் குணமடைந்து மொத்தம் 19,63,946 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 35,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 5,980 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,83,375 ஆகி உள்ளது. இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,921 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,745 பேர் குணமடைந்து மொத்தம் 9,11,847 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 64,350 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 415 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,43,627 ஆகி உள்ளது இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,244 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 322 பேர் குணமடைந்து மொத்தம் 9,25,489 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,875 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 50 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,605 ஆகி உள்ளது. நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,161 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 121 பேர் குணமடைந்து மொத்தம் 8,80,599 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 845 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 479 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,43,209 ஆகி உள்ளது இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,396 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 493 பேர் குணமடைந்து மொத்தம் 8,26,504 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,309 பேர் சிகிச்சையில் உள்ளனர்.