பொதுவாக, முகக்கவசம் அணிவது கொரோனா தொற்றிலிருந்து ஓரளவு பாதுகாப்பைத் தருகிறது. ஆனால், முகத்தின் பகுதிகளை இறுக்கமாக பொருந்தி மூடும் சர்ஜிக்கல் முகக் கவசங்கள் அல்லது மேல்புறமாக துணி பொருத்தப்பட்ட சர்ஜிக்கல் முகக்கவசங்கள், கொரோனாவிலிருந்து பெரியளவில் பாதுகாப்பு தருவதாக கூறியுள்ளது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்.
முகத்தின் பகுதிகளை இறுக்கமாக பொருந்தி மூடும் சர்ஜிக்கல் முகக் கவசங்கள் அல்லது மேல்புறமாக துணி பொருத்தப்பட்ட சர்ஜிக்கல் முகக்கவசங்கள், வைரஸ் தொற்றிலிருந்து 96.5% அளவிற்கு பாதுகாப்பளிக்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தவகை முகக்கவசங்களை, வைரஸ் தொற்றியவரும், தொற்றாதவரும் இதை அணியும்போது, இருவருக்கிடையே எந்தப் பரிமாற்றமும் நிகழ்வதில்லை என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தாக்கமும், அதுதொடர்பான மரணங்களும் இன்னும் குறையவில்லை என்பதால், முகக்கவச தேவை தொடர்பாக எந்தவித குறைவான மதிப்பீடும் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், முகக்கவசங்கள் தேவையான பயன்விளைவுகளை அளிக்கின்றன. அவற்றையே முறையாக அணியும்போது, அதன் நன்மைகள் பெரியளவில் அதிகரிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.