பைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வந்தது.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு செய்யப்பட்டது. தற்போது இந்த படத்தின் எடிட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் வருவதால் அதற்காக ஏதேனும் ஸ்பெஷல் ரிலீஸ் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

https://twitter.com/Ravikumar_Dir/status/1357298113409523714