சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் அயலான் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது.

சிவகார்த்திகேயனின் 19-வது படமாக உருவாகும் டான் படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், சிவகார்த்திகேயன் ப்ரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா அருள் மோகன் படத்தில் ஜோடியாக நடிக்கிறார். டாக்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார் .

இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க அனிருத் இசையமைக்கிறார்.