சென்னை: கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கேள்வி எழுப்பி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ளது. ஆட்சி தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும், ஆட்சிகை கைப்பற்ற திமுகவும் களப்பணியாற்றி வருகிறது. தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்கும் வகையில், திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில், கிராமங்கள் தோறும் மக்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை திருவெற்றியூரில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட மொழிப்போர் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் பெசும்போது, தமிழகத்தின் தீய சக்தியாக ஸ்டாலின் இருந்து வருவதாக விமர்சித்தவர், திமுக ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை திமுக தடுத்துள்ளார்களா என்று கேள்வி எழுப்பியதுடன்,
நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டது திமுக தான் என்று சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கு நல்லாட்சியை தரமுடியாத ஆட்சியை நடத்திய திமுக,மீண்டும் ஆட்சிக்கு வர தவிப்பது ஏன் என்றும், அதிமுக ஆட்சியில் என்ன குறை கண்டீர்கள், குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என கூறியதுடன், அதிமுகவின் கடைசி தொண்டன் உள்ள வரை திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பார்கள் என்றும் ஆவேசமாக கூறினார்.
மேலும், மக்களை ஏமாற்றும் நோக்கில் ஸ்டாலின் கிராமசபை என்ற பெயரில் கூட்டத்தை கூட்டி வருவதாக கூறியவர், கிராம சபை கூட்டத்தை யார் நடத்துவது, மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட அதிகாரிகள் தான் நடத்த வேண்டும். ஆனால், ஸ்டாலின் விதியை மீறி நடத்துகிறார். சம்மணங்கால் போட்டுகொண்டு கூட்டத்தை நடத்துகிறார். கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.