லண்டன்:
இங்கிலாந்தில் பள்ளிகள் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தின் கீழ் சபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியபோது, மார்ச் 8 முதல் இங்கிலாந்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் முழு அடைப்பு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும், அதுவே இங்கிலாந்து இயல்பு நிலைக்கு திரும்பும் முதல் அறிகுறியாகும் எனவும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel