சென்னை:
ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்புக்காக கூடிய அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 79 கோடி ரூபாய் மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ளது.
ஃபீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பு கொண்ட ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க -வினர் சென்னை மெரினாவில் குவிந்துள்ளனர்.
இந்த தொடண்டர்களில் அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.