லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் #MasterDisaster என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. மாஸ்டரை அநியாயத்துக்கு கிண்டல் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மாஸ்டர் படத்தை பார்த்த பிறகு அட்லி நக்கலாக சிரிப்பது போன்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

https://twitter.com/TrollVijay/status/1349233049058246656

மாஸ்டர் படம் ரொம்ப நீளமாக இருக்கிறது என்று பலரும் புகார் தெரிவித்துள்ளனர். முதல் பாதியே இழுக்கிறது, இதில் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையில் இப்படி ஒரு மீம்ஸ்.

எங்க தலைவரின் ஸ்டைலை விஜய் காப்பியடிப்பது ஓகே. ஆனால் அதற்காக அப்படியே காப்பியடிப்பதை ஏற்க முடியாது என்று ரஜினி ரசிகர்கள் வேறு கிளம்பியுள்ளனர்.

[youtube-feed feed=1]