இந்தூர்: காந்தியைக் கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சே தொடர்பான ஒரு படிப்பு மையத்தை, மத்தியப் பிரதேச மாநிலத்தில் துவக்கியுள்ளது இந்து மகா சபா.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; நாட்டின் புதிய தலைமுறையினருக்கு, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் பல்வேறு பரிமாணங்களை விரிவாக எடுத்துரைப்பது இதன் முக்கிய நோக்கம்.
இதனடிப்படையில், குரு கோபிந்த் சிங், சத்ரபதி சிவாஜி மற்றும் மகாரானா பிரதாப் உள்ளிட்டோரைப் பற்றிய செய்திகள் கற்பிக்கப்படும் என்று தெரிவித்தார் இந்து மகா சபையின் தேசிய துணைத் தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ்.
மேலும், கடந்த 1947ம் ஆண்டு நடைபெற்ற நாட்டுப் பிரிவினையில், காங்கிரஸ் கட்சியே பின்னால் இருந்தது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாதுராம் கோட்சேவுக்காக அமையும் முதல் படிப்பு மையம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.