டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் விவசாயிகள் இன்று 38வது நாளாக தொடரும் நிலையில், போராட்டக்களத்தில் உயிர்பலியாகி உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.

மோடி தலைமையிலான மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும என வலியுறுத்தி வடமாநில விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரிலும் இரவு–பகலாக வெட்டவெளியிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 38வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வரும் 4ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரமாக்கப்படும் என விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வயது முதிர்ந்த விவசாயிகள் குளிரை தாங்க முடியாமல் கடும் அவதிப்படுவதுடன் பலர் பலியாகி வருகின்றனர்.டெ ல்லி-உத்தர பிரதேச எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் ததிடீரென உயிரிழந்துள்ளார். அங்கு நிலவும் கடும் குளிர் காரணமாக அவர் அவர் இறந்திருக்கலாம் என்றும், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய மற்ற விவசாயிகள் அனுமதிக்காததால் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியவில்லை என்றும் காசியாபாத் மருத்துவ அலுவலர் கூறி உள்ளார்.
இன்று உயிரிழந்த விவசாயி கல்தான் சிங் (வயது 57) என்பவர் உத்தர பிரதேசத்தின் பாக்பாத் மாவட்டத்தைச் சேர்ந்த என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, போராட்டக் களத்தில் பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 46 ஆக உயர்நதுள்ளது.
[youtube-feed feed=1]