பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே பாலு காலமானார். இவர் சின்னத் தம்பி, பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்தவர்.
அண்மையில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தார்.
சமீபத்தில் இவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த பாலு வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற்றது.