சென்னை: தமிழகத்தில் இன்று 17 இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவிலும் சில நாட்களில் தடுப்பூசி,
கொரோனா பரவலை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இன்னும் சில நாட்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று கோரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.
தமிழகத்திலும் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை இன்று நடந்தது.
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் இன்று காலை 9 மணிக்கு கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை தொடங்கியது. தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி ஒத்திகையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். காலை 11 மணி வரை ஒத்திகை நடைபெற்றது.
மேலும, சேன்னை சாந்தோம் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஈக்காட்டுதாங்கல் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடந்தது.
அதுபோல நீலகிரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்தது. இந்த ஒத்திகையின்போது மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட ஆட்சியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதுமட்டுமினறி, ஒத்திகை நடத்தப்பட்ட ஒவ்வொரு சுகாதார மையத்திலும் பொறுப்பு அதிகாரி மற்றும் 25 சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர். அதற்கான செயலியான கோ-ஆப் மூலம் ஒத்திகைக்கு வருபவர்கள் குறித்த தகவல்கள் கண்காணிக்கப்படு வந்தன.
இநத் நிலையில், இன்று 17 இடங்களில் நடத்தப்பட்ட ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததாக அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இதையடுத்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.