கொல்கத்தா
திருணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவுக்கு மாறும் சட்டமன்ற உறுப்பினர்களை மம்தா பானர்ஜி கிண்டல் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநில ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு இழுப்பதாகத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார். சமீபத்தில் திருணாமுல் காங்கிரஸில் இருந்து மம்தா பானர்ஜியின் உறவினர் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்துள்ளார்
மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் அமித்ஷா உள்ளிட்ட அனைத்து பாஜக தலைவர்களும் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்வதை மம்தா விமர்சித்து வருகிறார். அதையொட்டி தமது பிரசாரத்தை நான்கு மீட்டர் நடந்து சென்று மம்தா நிகழ்த்தி உள்ளார்.
தனது பிரச்சாரத்தின் போது அவர் சுவேந்து அதிகாரியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பாஜக பணத்தை வீசி எறிவதால் அழுகிப் போன சட்டப்பேரவை உறுப்பினர்களை மட்டுமே விலைக்கு வாங்க முடியும் எனவும் திருணாமுல் காங்கிரஸை விலைக்கு வாங்க முடியாது எனக் கிண்டல் செய்துள்ளார்.