விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.
தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
இந்நிலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி என் புது லுக் டிசம்பர் 24ம் தேதி காலை வெளியாகும் என்று அரவிந்த்சாமி ட்வீட் செய்தார். அதன்படி புதிய லக் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கெட்டப்புடன் அரவிந்த் சாமி இருக்கும்போது, அவருக்கு அருகில் கண்ணாடியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சமுத்திரக்கனி.
எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பதை உறுதி செய்தது படக்குழு. இதற்காக ஆர்.எம்.வீரப்பன் மாதிரியே நடப்பது, பேசுவது உள்ளிட்ட பயிற்சிகளை எடுத்துக்கொண்டு சமுத்திரக்கனி நடித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
புரட்சித்தலைவர் அவர்களின் நினைவு தினத்தில்…அண்ணன் அரவிந்த்சாமி அவர்களுடன் நான் "தலைவி" திரைப்படத்தில்… பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களுக்கு நன்றி…வெல்வோம்… pic.twitter.com/GlslXjzT6e
— P.samuthirakani (@thondankani) December 24, 2020