சென்னை: ஆக்ரா மற்றும் லோனாவாலா பகுதிகளில் சாலைகள்தான் தேசிய நெடுஞ்சாலைகளா? தமிழகமெல்லாம் கண்டுகொள்ளப்படாதா? என்று இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன்.
கடந்த வெள்ளியன்று, தான் வேலூர் சென்று வந்ததாக தெரிவித்த அவர், மழையால் கடுமையாக சேதமடைந்த மதுரவாயல் – ராணிப்பேட்டை பிரிவு சாலையில், ஆங்காங்கே பெயரளவுக்கே சில மராமத்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றுள்ளார்.
மேலும், இந்த மோசமாக நிலை தொடர்வதால், வரும் ஜனவரியில் பொங்கல் பண்டிகை வரை, அந்த வழித்தட சுங்கச் சாவடிகளில் 50% க்கு மேல் சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆக்ரா மற்றும் லோனாவாலா ஆகிய பகுதிகளில் இருக்கும் சாலைகள்தான் தேசிய நெடுஞ்சாலைகளா? என்று இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தை காட்டமாக விமர்சித்துள்ளார் நீதிபதி. இந்தப் பிரிவு NH48 என்ற வகைக்குள் வருகிறது.