‘திருமணம் எனும் நிக்கா’ என்ற படத்தை இயக்கிய அனீஸ், இப்போது சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.
இந்த படத்தில் பிந்துமாதவி, வாணிபோஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
“விரோதியிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பது இந்த படத்தின் கருவாகும். எனவே பாரதியாரின் பாடல் வரியை படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளோம்” என்கிறார், இயக்குநர் அனீஸ்.
கன்னட நடிகர் சதீஷ் நினான்சாம் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பெரிய குற்றங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்று விடுதலையான கைதிகள் இந்த படத்தில் பிரதான கேரக்டர்களில் வருகின்றனர்.
“ஜெயில் கைதிகளின் வாழ்க்கையை பேசும் படம் இது என்பதால், நிஜமான கைதிகளை நடிக்க வைக்கப்போகிறோம்” என்கிறார், இயக்குநர் அனீஸ்.
– பா. பாரதி