தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் கொடிகட்டி பறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் சினிமாவாக வெளிவந்து வெற்றி பெற்றது. அந்த படத்தில் வித்யாபாலன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்போது தமிழகத்தை சேர்ந்த மற்றொரு கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வரலாறு அவரது பெயரிலேயே சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஷகீலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

‘சூப்பர்ஸ்டார்’ வேடத்தில் நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ள இந்த படத்தை இந்திரஜித் லங்கேஷ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் நேற்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

மூன்று நிமிடம் ஓடும் இந்த டிரெய்லரில், ரிச்சா சத்தா, மலையாள பெண்கள் போன்று முண்டு கட்டிக்கொண்டும், கவர்ச்சியாகவும் தோன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சில்க் ஸ்மிதா தற்கொலை செய்தி கொண்ட செய்தியுடன், டிரெய்லர் ஆரம்பமாகிறது.

வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் சுமார் ஆயிரம் திரையரங்குகளில் இந்த படம் வெளியிடப்படுகிறது.

ஊரடங்கு முடிந்து, தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு, அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் படம். ஷகீலா என்பது குறிப்பிடத்தக்கது.

– பா. பாரதி