டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து சேவையாற்றும் மருத்துவர்களுக்கு இடையிடையே ஓய்வு கொடுங்கள் , தொடர்ச்சியான பணிகள் அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்தது. இதனால், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர் தொடர்ந்து பணியாற்ற வலியுறுத்தப்பட்டனர்.  இதற்கிடையில் பல மருத்துவர்களும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சோகங்களும் அரங்கேறின.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும், தொடர்ந்து பணியாற்ற உத்தரவிடக்கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சுமோட்டோ வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்.எஸ்ரெட்டி, எம்.ஆர்.ஷா அமர்வு விசாரித்தது.  அப்போது, கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு,  “கடந்த ஏழு எட்டு மாதங்களாக எந்த இடைவெளியும் கொடுக்கப்படவில்லை, அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.  இது மிகவும் வேதனையாக   உள்ளது, இதுபோன்ற நடவடிக்கைகள்,  அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். அவர்களுக்கு சிறிது இடைவெளி கொடுப்பதைப் பற்றி சிந்தியுங்கள் என்று மத்தியஅரசுக்கு அறிவுடிர கூறியது. ‘

இதையடுத்து வாதாடிய மத்தியஅரசின்  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டாக்டர்களுக்கான இடைவெளி குறித்து எஸ்சி அளித்த பரிந்துரைகளை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும் என்றும், கொரோனா தொற்று தடுப்பு  கடமையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு இடைவெளி வழங்குவது குறித்து அரசு ஆலோசிக்கும் என்று மேத்தா உறுதியளித்துள்ளார்.