பெங்களூரு: சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் கவுண்ட் டவுன் இன்று தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 3.41 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்படுகிறது.

அதற்கான இறுதிகட்டப் பணிகள் மும்முரம் அடைந்துள்ளன. 25 மணி நேரம் கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், இஸ்ரோ சார்பில் இதுவரை 41 செயற்கை கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 2011ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட் 12 செயற்கை கோளின்  ஆயுட்காலம் தற்போது முடிந்துவிட்டது.

அதற்கு பதிலாக அதிநவீன சிஎம்எஸ் – 01 செயற்கை கோளை இஸ்ரோ வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.