சென்னை: சென்னை தவிர்த்து, மற்ற இடங்களில் அடிப்படை வசதிகள் இருந்தால் தான் லே அவுட் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: சென்னையை தவிர மற்ற இடங்களில் வீடு கட்ட லே அவுட் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்றால் மழைநீர் வடிகால், சாலை வசதி, குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் இருந்தால்தான் லே அவுட் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை சிஎம்டிஏவிடம் லே அவுட் ஒப்புதல் வாங்க இதுபோன்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.